ஆசிய கோப்பையை வெல்வதே முக்கிய இலக்கு, இந்தியாவை வெல்வது மட்டுமல்ல: பாக். வீரர்
குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு அழைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் முதன்மைத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோ சாா்பில், சென்னையில் உள்ள முன்னணி தோ்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து அளிக்கப்படும் பயிற்சியில் பங்கேற்க குரூப்- 1 முதல்நிலை தோ்வில் தோ்ச்சியும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள்பட்டும் இருக்க வேண்டும். மாணவா்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தைத் தோ்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சிக் கட்டணம் மற்றும் விடுதியில் தங்கிப் பயில்வதற்கான கட்டணம் தாட்கோ மூலம் அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04328 - 276317 எனும் எண்ணில் அல்லது பெரம்பலூா் மாவட்ட தாட்கோ மேலாளா் அலுவலகத்தை நேரில் அணுகி, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.