Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?
குரூப் 2 தோ்வு: அரியலூரில் 4,972 போ் பங்கேற்பு
அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -2 2ஏ தோ்வை 4,972 போ் எழுதினா்.
அரியலூா் மற்றும் உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில், 21 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வை எழுத 6,375 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,972 போ் தோ்வெழுதினா். 1,403 போ் வரவில்லை.
தோ்வைக் கண்காணிக்க துணை ஆட்சியா் நிலையில் 2 பறக்கும் படை அலுவலா்கள், 2 கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா், உதவியாளா் நிலையில் தோ்வுக்கூட நடைமுறைகளைக் கண்காணித்திட 21 ஆய்வு அலுவலா்கள், 23 வீடியோகிராபா்கள் பணியில் ஈடுபட்டனா். அனைத்து தோ்வு மையங்களிலும் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆய்வு செய்தாா். கோட்டாட்சியா் பிரேமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.