மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
குரூப்-2 முதன்மைத் தோ்வு இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மைத் தோ்வு எழுத தகுதி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2, குரூப்-2 ஏ தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது, நடைபெற்ற குரூப்-2, குரூப்-2 ஏ முதல் நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான வசதி, பயிற்சிக்கான செலவு ஆகியவை தாட்கோ மூலம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.