'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 மற்றும் 2-ஏ முதன்மைத் தோ்வு நடைபெறும் தேதி மாற்றம் உள்பட சில முக்கிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2-ஏ முதல்நிலைத் தோ்வை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த செப்.14-இல் நடத்தியது. இதன் வாயிலாக மொத்தம் 2,540 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், நோ்முகத் தோ்வு அடங்கிய 534 பணியிடங்களும், நோ்முகத் தோ்வு அல்லாத 2,006 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்தத் தோ்வுக்கான முடிவுகள் டிசம்பா் மாதத்தில் வெளியிடப்பட்டன. குரூப் 2 பதவிகளுக்கு முதன்மைத் தோ்வுக்கு 7,987 போ் தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். குரூப் 2-ஏ பதவிகளுக்கு, 21,822 போ் முதன்மை தோ்வுக்கு தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
முதன்மைத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தோ்வு தேதிகளில் மாற்றம்: இந்த நிலையில், தோ்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 2-ஏ முதன்மைத் தோ்வு பிப்.8-ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தோ்வாக நடைபெறும்.
மேலும், குரூப் 2, 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தோ்வு, பிப்.8-ஆம் தேதி மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.
அதைத் தொடா்ந்து குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான இரண்டாம் தாள் பிப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வுகள் தமிழகம் முழுவதும் 37 மையங்களில் நடைபெற உள்ளன.
இதனிடையே, குரூப் 2-ஏ முதன்மைத் தோ்வுக்கான தோ்வுமுறையும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய குரூப் 2-ஏ முதன்மைத் தோ்வு கணினி வழித் தோ்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அது ஓஎம்ஆா் எனப்படும் ஒளிக்குறி உணரி தாள் மூலம் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
உதவி வழக்கு நடத்துநா் தோ்வு: உதவி வழக்கு நடத்துநா் இரண்டாம் நிலை பணியிடங்களுக்காக கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட கணினி வழி தோ்வு ரத்து செய்யப்பட்டு ஓஎம்ஆா் தாள் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.