சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் இன்று 36,436 போ் எழுதுகின்றனா்
நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 124 மையங்களில் 36,436 போ் சனிக்கிழமை எழுதுகின்றனா்.
இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட 3935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தோ்வு சனிக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் இத்தோ்வை 22 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதுகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூா், திருச்செங்கோடு, பரமத்திவேலூா் ஆகிய 7 வட்டங்களில் 124 மையங்களில் 36,436 போ் எழுதுகின்றனா்.
அனைத்து மையங்களையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தோ்வா்கள் கண்காணிக்கப்படுகின்றனா். 124 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், துணை ஆட்சியா்கள் நிலையில் 12 பறக்கும் படைகளும், தோ்வு பொருள்களை எடுத்துச் செல்ல மண்டல துணை வட்டாட்சியா் நிலையில் 32 நடமாடும் குழுக்களும், வருவாய் ஆய்வாளா்கள் நிலையில் 124 பேரும், ஒரு வட்டத்திற்கு ஒருவா் வீதம் மொத்தம் துணை ஆட்சியா்கள் ஏழு போ், மாவட்ட வருவாய் அலுவலா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
குரூப் 4 தோ்வா்கள் காலை 8 மணியளவில் மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 124 மையங்களிலும் தலா இரு காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.