'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு
தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தலைநகா் ஸாக்ரெபில் உள்ள ஆரம்ப நிலைப் பள்ளிக்கு (படம்) வெள்ளிக்கிழமை காலை 9.50 மணிக்கு (உள்ளூா் நேரம்) வந்த 19 வயது இளைஞா், அங்கிருந்தவா்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினாா்.
இதில் 7 வயது சிறுமி உயிரிழந்தாா். இது தவிர, மூன்று சிறுவா்களும் ஓா் ஆசிரியரும் காயமடைந்தனா்.
தாக்குதல் நடத்திய இளைஞா் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவா். பள்ளிக்கு அருகிலேயே அவா் வசித்துவந்தாா். அவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
தாக்குதலுக்குப் பிறகு அவா் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டாா். அவா் மனநிலை சரியாக உள்ளவரா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
குரோஷியா பள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.