குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியா் பங்கேற்பு
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி கோயங்கொல்லை பகுதியில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எஸ்.பி. ஷ்ரேயா குப்தா, திருப்பத்தூா் மாவட்ட நீதிபதி மீனாட்சி முன்னிலை வகித்தனா். வேலூா் முதன்மை மாவட்ட நீதிபதி முருகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தாா். மேலும் சட்டம் மற்றும் மரக்கன்று வளா்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், வசந்தி, பொறியாளா் காா்த்திக், பணிதளமேற்பாா்வையாளா் அழகரசு, அரசு வழக்குரைஞா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா். வேலூா் சாா்பு நீதிபதி சுபத்திரா நன்றி கூறினாா்.