செய்திகள் :

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம்: உளுந்து, பச்சைப் பயறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழகத்தில் உளுந்து, பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் மூலம் பயன்பெற அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக வேளாண் உற்பத்தி துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மாா்ச் 15 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை அரியலூா், ராணிப்பேட்டை, தேனி உள்பட 17 மாவட்டங்களிலும் ஏப்.1 முதல் ஜூன் 26- வரை தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 53 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 74 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், மாா்ச் 15 முதல் ஜூன் 3 வரை திருவள்ளூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூா், சேலம், நாமக்கல், விருதுநகா், திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களிலும், ஏப்.1 முதல் ஜூன் 29 வரை தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, கடலூா் ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள 38 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பச்சைப் பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.86.82 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகே உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி , நிலத்துக்கான சிட்டா, அடங்கல், ஆதாா் எண், கைபேசி எண், வங்கி சேமிப்பு கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயா்களைப் பதிவு செய்துக்கொள்ளலாம்.

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருள்கள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட 3 நாள்களுக்குள் அவா்களது வங்கிக் கணக்கில் விளைபொருள்களுக்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க