Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
குறைவான விலையில் தரமான துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக தலைவா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: நியாயவிலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் தமிழகத்துக்கு துவரம் பருப்பு கிலோ ரூ.88.50-க்கு வழங்க முன்வந்திருக்கும் பருப்பு நிறுவனங்கள், குஜராத்துக்கு ரூ.81-க்கு வழங்குவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
குஜராத்துக்கு ரூ.81-க்கு துவரம் பருப்பை வழங்கும் நிறுவனங்கள் தமிழகத்துக்கு மட்டும் கிலோ ஒன்றுக்கு ரூ.7.50 கூடுதலாக வைத்து ரூ.88.50-க்கு விற்பனை செய்வது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
60,000 டன் அளவுக்கான துவரம் பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பருப்பு நிறுவனங்கள் கூறியிருக்கும் தொகைக்குப் பருப்பைக் கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு ரூ.45 கோடி இழப்பீடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பருப்பு நிறுவனத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி குஜராத் மாநிலத்துக்கு வழங்கும் அதே விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, தரமான துவரம் பருப்பைக் கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.