செய்திகள் :

குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

post image

சென்னை: அரசின் மீது குற்றச்சாட்டு கூறுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

தமிழ்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 171 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சாமிநாத ஐயர் திருவுருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தமிழ்தாத்தா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய உ.வே.சா-வின் 171 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரின் ஆணைக்கிணங்க இந்த ஆண்டு முதல் இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக நடத்தப்படுகிறது.

இதில் நிதித்துறை அமைச்சர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு மரியாதை செய்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் எனவும் அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் விதமாக மாநில கல்லூரியில் பட்டிமன்றம் பேச்சுப் போட்டியில் என பல நடக்க இருக்கிறது என தெரிவித்தார்.

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

இனி ஆண்டுதோறும் உ.வே.சா பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என்ன தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகம் இருந்தும், அவா் பெயரில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு இருக்கை இல்லை என ஆளுநர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ஆளுநர் அரசுக்கு ஆலோசனையோ அல்லது சுட்டிக்காட்டுவது போல் இருந்தால் அதிகாரிகளின் மூலமாகவோ அல்லது குறிப்பு மூலமாக வழங்க வேண்டும். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறுவது போல் உள்ளது. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என தெரிவித்தார்.

தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ‘தமிழ், தமிழ்’ என்று பேசுகிறவா்கள், தமிழருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எந்தச் சேவையையும் இதுவரை செய்யவில்லை என ஆளுநர் ரவி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்... மேலும் பார்க்க

கோபியில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.கோபிச்செட்டிப்பாளையத்தி... மேலும் பார்க்க