தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் பெய்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பேரருவியைத் தொடா்ந்து பழையகுற்றாலம், ஐந்தருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து, குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீஸாா் தடை விதித்தனா்.