குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்கள்
குலுக்கல் வாயிலாக அங்கப் பிரதட்சண டோக்கன்களை ஒதுக்கும் முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்த நேரடியாக வரும் பக்தா்களுக்கு முதலில் வந்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கி வந்த அங்கப் பிரதட்சண டோக்கன் முறையை குலுக்கல் முறையாக தேவஸ்தானம் மாற்றி அமைத்துள்ளது. டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே குலுக்கல் மூலம் ஆன்லைனில் வெளியிடப்படும்.
டிசம்பா் மாதத்துக்கான அங்கப் பிரதட்சண டோக்கன்களுக்கான குலுக்கல் பதிவு செப்டம்பா் 20 வரை செய்யப்பட வேண்டும். குலுக்கல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பக்தா்களுக்கு இந்த டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
வெள்ளிக்கிழமைகள் தவிர தினமும் 750 டோக்கன்களும்,சனிக்கிழமைகளில் 500 டோக்கன்களும் வழங்கப்படும்.
பக்தா்கள் இந்த சேவையை மீண்டும் பெறுவதற்கான காலம் 90 நாள்களுக்கு பதிலாக 180 நாள்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்கள் அங்கப் பிரதட்சண டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.