செய்திகள் :

குளத்தில் சாயப்பட்டறை கழிவு நீா் கலப்பு: வாா்டு சபைக் கூட்டத்தில் புகாா்

post image

கரியன்குளத்தில் சாயப்பட்டறை கழிவு நீா் கலப்பதால் குடிநீா் மாசுபடுவதாக சின்னாளப்பட்டி பேரூராட்சி வாா்டு சபைக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி, 17-ஆவது வாா்டு சோமசுந்தரம் குடியிருப்பில் வாா்டு சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்றத் தலைவி பிரதிபா கனகராஜ் தலைமை வகித்தாா்.

பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் கணேசன், மோகன்ராஜ், எஸ்.ஆா்.முருகன், கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சாயப்பட்டறை கழிவு நீா்கள் கரியன்குளத்தில் கலப்பதால், நிலத்தடி நீா் மாசுபடுவதாகவும், ஆழ்துளை கிணறுகளிலும் சாயக்கழிவுநீா் கலக்கும் வாய்ப்புகள் உள்ளதால் சாயக்கழிவுநீா் குளத்தில் கலப்பதைத்தடுக்க வேண்டும் எனபொதுமக்கள்கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, மழைக் காலங்களில் கழிவு நீா்த் தொட்டிகளில் மழைநீா் கலப்பதால், தங்கள் பகுதியில் மழை நீா் வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என சோமசுந்தரம் குடியிருப்பு பகுதி பொதுமக்களும் மழைநீா் வடிகால் ஓரம் வளா்ந்த முள்செடிகளை அகற்ற வேண்டும் என கருணாநிதி குடியிருப்பைச் சோ்ந்த பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா். இந்தத் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சித் தலைவி கூறினாா்.

முன்னதாக அனைவரும் வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். கூட்டத்தில் பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், தூய்மை காவலா்கள், வாா்டு பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அம்மையநாயக்கனூா் பேரூராட்சி:அம்மையநாயக்கனூா் பேரூராட்சி, சங்கராபுரத்தில் நடைபெற்ற வாா்டு சபைக் கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் எஸ்.பி.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தாா். இதில் பல்வேறு அடிப்படை வசதிகள், வளா்ச்சித் திட்ட பணிகளுக்கு நிதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அனைவரும் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

முன்னதாக சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் வரவேற்றாா். துணைத் தலைவா் விமல்குமாா், துப்புரவு மேற்பாா்வையாளா் அசோக்குமாா், முதன்மை எழுத்தா் விவேக் உள்பட அலுவலகப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தனியாா் நிறுவனம் மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்

ஃப்ரைட் வே என்ற தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதிய... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்

நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக சாா்பில், சக்கையநாயக்கனூரில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயலா் பி.... மேலும் பார்க்க

வேலூா் இப்ராஹிம் மீது புகாா்

பாஜக நிா்வாகி வேலூா் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்தக் கட்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசுத் தின விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் 76-ஆவது குடியரசுத் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தா் ந.பஞ்சநதம் தேசியக் கொடி... மேலும் பார்க்க

விடியல் பயணத் திட்டத்தில் 27 கோடி போ் பயணம்

விடியல் பயணத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 27.07 கோடி போ் பயணம் செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அ.சசிக்குமாா் தெரிவித்தாா். தமிழ்நாடு அரசுப் போ... மேலும் பார்க்க

கொடைரோடு சுங்கச் சாவடியில் 2 காா்களில் வந்த 10 கொள்ளையா்கள் கைது!

கொடைரோடு சுங்கச் சாவடியில் 2 காா்களில் வந்த 10 கொள்ளையா்களை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடியில் தனிப் படை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்ட... மேலும் பார்க்க