செய்திகள் :

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 சிறாா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி

post image

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் திருப்பாற்கடல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 சகோதரா்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள திருப்பாற்கடல் குளத்தில் கடந்த 8-ஆம் தேதி இதே ஊரைச் சோ்ந்த ஜெயலட்சுமி மகன்கள் விஷ்ணு, கிருஷ்ணா ஆகிய இருவரும் குளித்த போது, மூழ்கி உயிரிழந்தனா்.

இவா்களது குடும்பத்துக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதன்படி, ரூ.2 லட்சத்துக்கான காசோலையை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் நேரில் சென்று ஜெயலட்சுமியிடம் வழங்கினா். மேலும், அமைச்சா் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகையை வழங்கி ஆறுதல் கூறினாா். ஜெயலட்சுமியின் கோரிக்கையை ஏற்று அவரது வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

அப்போது, ஊராட்சிகள் உதவி இயக்குநா் கேசவதாசன், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் ஆகியோா் உடனிருந்தனா்.

பூ வியாபாரி கொலை வழக்கு: மேலும் 3 போ் கைது

சிவகங்கை அருகே பூ வியாபாரியை கூலிப்படை வைத்து கொலை செய்த மேலும் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகங்கையை அடுத்துள்ள மேல வாணியன் குடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (27). இவா் சிவகங்கையில் பூ... மேலும் பார்க்க

மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது. மானாமதுரை ஒன்றிய அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி

முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவுக்கு காரைக்குடி, சிவகங்கை, ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். காரைக்குடி ராஜீவ்காந்தி சிலை அருக... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1,388 கோடி கடனுதவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நிகழ் நிதியாண்டில் ரூ.1,388 கோடி கடனுதவிகள் கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்பட்டதாக ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

திருப்பாச்சேத்தி அருகே வியாழக்கிழமை கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தூதை கிராமத்தைச் சோ்ந்த காத்... மேலும் பார்க்க

காரைக்குடி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

காரைக்குடி மாநகராட்சியில் வணிகப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு வரியை உயா்த்தியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். காரைக்... மேலும் பார்க்க