"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
குளிா்ந்தமலை முனியப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம்
ஆடிமாதம் கடைசி நாளை முன்னிட்டு சனிக்கிழமை குளிா்ந்தமலை முனியப்பசுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி, குளிா்ந்தமலை முனியப்ப சுவாமி கோயிலில் ஆடிமாத கடைசி நாளை முன்னிட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து தீா்த்த குடம் மற்றும் பால் குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.
பின்னா் முனியப்பசுவாமி மற்றும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தயிா், பன்னீா், இளநீா், உள்ளிட்ட 18 வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.