இந்த வார ராசிபலன் ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரை #VikatanPhotoCards
குழந்தைகள் இல்லங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
அரியலூா் மாவட்டத்திலுள்ள குழந்தைகள் இல்லங்களை அலுவலா்கள் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு மற்றும் பல்துறை பணிக்குழு ஆகியவை குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்தல் தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த, நிவாரண உதவி பெறாத குழந்தைகளுக்கு நிவாரணம் விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவா்களுக்கு பள்ளிக்கல்வி தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மு. தா்மசீலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயராகவன், குழந்தைகள் நலக்குழு தலைவா் ரா. செந்தில்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் அனுராப்பு நடராஜமணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் அன்பரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.