செய்திகள் :

குழந்தைகள் கண்முன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; மும்பையில் பகீர் சம்பவம்; நடந்தது என்ன?

post image

மும்பையில் தனக்குச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்த நண்பருக்கு வாலிபர் ஒருவர் துரோகம் செய்துள்ளார்.

மும்பை மலாடு மால்வானி காவ்தேவி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ் சவான். இவரது மனைவி பூஜா. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவர்களது வீட்டில் இம்ரான் மன்சூரி (26) என்பவர் தங்கி இருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். இம்ரானும், ராஜேஷும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் மும்பைக்கு வந்தபோது தங்க இடமில்லாமல் இருந்தார்.

இதையடுத்து அவருக்குத் தங்க இடம் கொடுத்து, சாப்பாடும் கொடுத்து வேலையும் வாங்கிக்கொடுத்தார். ராஜேஷ் வீட்டில் இம்ரான் தங்கி இருந்தபோது பூஜாவுடன் தொடர்பு ஏற்பட்டது.

கொலை
கொலை

இதையடுத்து ராஜேஷைக் கொலை செய்ய பூஜாவும் இம்ரானும் முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இரவில் ராஜேஷ் வீட்டிற்கு வந்ததும் அவரைப் பூஜாவும், இம்ரானும் சேர்ந்து அவருக்கு மது குடிக்கக் கொடுத்தனர். அளவுக்கு அதிகமாக ராஜேஷ் மது குடித்ததும் அவரைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இரண்டு குழந்தைகள் கண் முன்பு இந்த சம்பவம் நடந்தது.

கொலைக்குப் பிறகு ரத்தத்தைக் கழுவிவிட்டு உடலை இரு சக்கர வாகனத்தில் உடலை ஏற்றிக்கொண்டு எடுத்துச் சென்றனர். அரை கிலோ மீட்டர் சென்றவுடன் பிடிபட்டுவிடுவோம் என்று பயத்தில் உடலை அப்படியே தெருவில் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிற்கு வந்த பிறகு இருவரும் போலீஸ் நிலையத்திற்குச் சென்று ராஜேஷைக் காணவில்லை என்று கூறி புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் ராஜேஷ் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ராஜேஷ் உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி, பின்னால் பூஜா அமர்ந்து கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. போலீஸார் இது குறித்து விசாரித்தபோது இரண்டு பேரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர்.

கொலை

தீவிர விசாரணையில் ராஜேஷைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். ராஜேஷ் வீட்டிற்கு ஆய்வாளர் சைலேந்திரா சென்றபோது கொலையை நேரில் பார்த்த இரண்டு மைனர் குழந்தைகளும் அதிர்ச்சியிலிருந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

கரூர் தண்டவாளத்தில் விரிசல்; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் துரித செயல்; 100 மீட்டர் முன்பு நின்ற ரயில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. இந்நிலையில், அதன் அருகே குடியிருந்து வரு... மேலும் பார்க்க

சென்னை: கொலையில் முடிந்த தாய் - மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.... மேலும் பார்க்க

ரயிலில் மாணவிக்குப் பாலியல் தொல்லை; திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இளைஞரை மடக்கிய போலீஸார்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்... மேலும் பார்க்க

விஜய் படம் பாணியில் அரசு பேருந்து இருக்கையில் வைக்கப்பட்ட அரிவாள்; பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் எதிர் எதிரே இயங்கி வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி கிராமப் பகுதிகள், வால்பாறை மற்றும் க... மேலும் பார்க்க

மாஜி அமைச்சர் மகன் விமானத்தில் பேங்காக் கடத்தப்பட்டாரா? - போலீஸ் உத்தரவால் புனே திரும்பிய விமானம்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தானாஜி சாவந்த் மகன் ரிஷிராஜ் சாவந்த் நேற்று மாலை புனே விமான நிலையத்தில் மர்ம நப... மேலும் பார்க்க

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க