செய்திகள் :

குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க முகாம்

post image

தேனி மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் வருகிற 10, 17 ஆகிய தேதிகளில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைகள், பெண்களுக்கு ஊட்டச் சத்து குறைபாடு, ரத்த சோகை நோய் பாதிப்பை தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வருகிற 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களிலும், 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்களுக்கு துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும். முகாமில் குடற்புழு நீக்கம் செய்ய அல்பெண்டசோல் என்ற மாத்திரை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க

போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்கும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க

குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்

போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க