செய்திகள் :

``குவாரி கொள்ளை; ஜகபர் அலி படுகொலை... அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்'' -பிரேமலதா விஜயகாந்த்

post image

கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை...

கனிம வள கொள்ளை எதிர்த்து புகார் அளித்த திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,

"தமிழகம் முழுவதும் இன்றைக்கு கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை ஆகியவை தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துலையானூர் குவாரியில் எவ்வளவு தூரம் கொள்ளை நடந்துள்ளது என்பது பற்றி அவர் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். எத்தனை லோடுகள் திருடப்பட்டு உள்ளது என்றும் புகார் கொடுத்துள்ளார். ஆனால், அவரது புகார் மனுவை விசாரிக்காத கலெக்டர், சப்-கலெக்டர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு அரசு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தே.மு.தி.க சார்பில் கொலையான ஜகபர் அலி குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது” என்றார்.

premalatha

வேங்கைவயல் விவகாரம்

அதன் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த், “ஆட்சி அதிகாரம் என்பது மக்களையும் காப்பாற்றுவதற்கு தான். ஆனால்,தற்போது தமிழகத்தில் தங்களையும், தங்களது குடும்பத்தார்களையும் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று செயல்பட்டு வருகின்றனர். வேங்கைவயல் விவகாரம் என்பது மிகவும் தலைகுனிவான விஷயம். இந்த சம்பவத்தில் தற்போது மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்டு சி.பி.சி.ஐ.டி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் உண்மை குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்ய வேண்டும் என்பதுதான் தே.மு.தி.க-வின் நிலைப்பாடு. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்றால், அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தல்

தமிழக அரசின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். மிகப்பெரிய மாற்றத்தை வரும் 2026 -ம் வருட சட்டமன்றத் தேர்தல் கொடுக்கும். ஜனநாயகத்திற்கு முரண்பாடான ஆட்சி அகற்றப்படும்.

கோமியம் பிரச்னை

தற்போது கோமியம் பிரச்னை பெரிதாக பேசப்படுகிறது. என்னுடைய கருத்து எனறு பார்த்தால், ஒருவரது நம்பிக்கையை யாரும் கெடுக்க கூடாது. கோமியம் மருத்துவ குணம் உடையது என்று கூறுபவர்கள் குடித்துக் கொள்ளட்டும். அதை மறுப்பவர்கள் குடிக்காமல் இருக்கட்டும்” என்றார்.

US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை" -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

'அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்' - இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் த... மேலும் பார்க்க

Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" - இந்தோனேசிய அதிபர்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துண... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan:எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்ற... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அரிட்டாபட்டி மக்கள்அரிட்டாபட்டி: `பல்லுயிர் பெருக்க தல... மேலும் பார்க்க