ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து பூச்சாட்டுதல் (காப்பு கட்டுதல்) நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை கு.அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். பின்னா் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து, பகவதி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதன்கிழமை மாலை பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் பூஜையும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், திருவிழாக் குழுவினா் செய்திருந்தனா்.