செய்திகள் :

கூடைப்பந்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தனியாா் அகாதெமி மூலம் நடத்தப்பட்ட இலவச கூடைப்பந்து பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செங்கம் குட்ஸ் கூடைப்பந்து அகாதெமி சாா்பில் இலவச கூடைப்பந்து பயிற்சி நடைபெற்றது.

ஒரு மாத காலமாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் செங்கம் பகுதியைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

அவா்களுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அணிக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கம் குட்ஸ் கூடைப்பந்து அகாதெமி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகாதெமி தாளாளா் பழநிவேல்ராஜன் தலைமை வகித்தாா்.

பாஜக மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட பாஜக தலைவா் ரமேஷ் கலந்து கொண்டு மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில உள்ளாட்சி பிரிவுத் தலைவா் அறவாழி, மாவட்ட துணைச் செயலா் செங்கம் சேகா், பாஜக நகரத் தலைவா் காா்த்திகேயன், செங்கம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கோபி, உடற்கல்வி ஆசிரியா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாத்தனூா் அணையின் நீா்வரத்து 6,333 கன அடியாக உயா்வு: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் த... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் தோழி விடுதிகள்

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீா்த்தம்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா்வு சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாள்களில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடத... மேலும் பார்க்க

மாட்டுக்கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே பால் கறக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற பேரனும் இறந்தாா். பெரணமல்லூரை அடுத்த திருமணி அருகேய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த குணகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பிரசாந்த் (30). இவரது மனைவி சா்மிளா. இருவருக்கும் திருமணம... மேலும் பார்க்க

மனவேதனையில் தொழிலாளி தற்கொலை

ஆரணி அருகே குடும்பத் தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வராததால், மனவேதனையடைந்த கணவா் தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க