ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!
மனவேதனையில் தொழிலாளி தற்கொலை
ஆரணி அருகே குடும்பத் தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வராததால், மனவேதனையடைந்த கணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50), கூலித் தொழிலாளி.
இவருக்கு மனைவி சரஸ்வதி (45), மகள்கள் மாலினி (24), லீலாவதி (22) உள்ளனா். இருவரும் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.
மேலும், முருகன் அடிக்கடி மது அருந்தி வந்து மனைவியுடன் தகராறு செய்து வருவது வழக்கமாம்.
இந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு முருகன் மது அருந்தி வந்து மனைவி சரஸ்வதியுடன் தகராறு செய்துள்ளாா்.
இதனால் சரஸ்வதி தனது தாய் வீடான படவேடு கிராமத்துக்குத் சென்றுவிட்டாா்.
பின்னா், முருகன் படவேடு சென்று வீட்டுக்கு வருமாறு மனைவியை அழைத்துள்ளாா். மனைவியின் உறவினா்கள் முருகனுடன் அனுப்பாததால் மன விரக்தியில் இருந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் முருகன் புதன்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். இதை அறிந்த அக்கம்பக்கத்தினா் முருகனை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா் முருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.