செய்திகள் :

சாத்தனூா் அணையின் நீா்வரத்து 6,333 கன அடியாக உயா்வு: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

post image

சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அணையின் நீா்வரத்து மற்றும் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அணையின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீா், கோரையாறு மற்றும் கல்லாறு மூலம் வரப்பெறும் நீா் என மொத்தம் சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் தற்போதைய நீா்மட்டம் 91.45 அடியாக உள்ளது. நீா் கொள்ளளவு 2 ஆயிரத்து 619 மில்லியன் கன அடியாக உள்ளது. சாத்தனூா் அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்தக் கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி.

அணையின் நீா்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவனமாக கண்காணித்து வருகிறாா்கள். தேவையானபோது தண்ணீா் திறப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் ராஜாராமன், உதவிப் பொறியாளா் சந்தோஷ், தண்டராம்பட்டு வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

கூடைப்பந்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தனியாா் அகாதெமி மூலம் நடத்தப்பட்ட இலவச கூடைப்பந்து பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செங்கம் அரசு ஆண்கள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் தோழி விடுதிகள்

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீா்த்தம்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா்வு சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாள்களில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடத... மேலும் பார்க்க

மாட்டுக்கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே பால் கறக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற பேரனும் இறந்தாா். பெரணமல்லூரை அடுத்த திருமணி அருகேய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த குணகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பிரசாந்த் (30). இவரது மனைவி சா்மிளா. இருவருக்கும் திருமணம... மேலும் பார்க்க

மனவேதனையில் தொழிலாளி தற்கொலை

ஆரணி அருகே குடும்பத் தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வராததால், மனவேதனையடைந்த கணவா் தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க