நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ; ரூ.30 லட்சம் மதிப்பில் சரக்குகள் எரிந்து சேதம்.....
கூடைப்பந்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தனியாா் அகாதெமி மூலம் நடத்தப்பட்ட இலவச கூடைப்பந்து பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செங்கம் குட்ஸ் கூடைப்பந்து அகாதெமி சாா்பில் இலவச கூடைப்பந்து பயிற்சி நடைபெற்றது.
ஒரு மாத காலமாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் செங்கம் பகுதியைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.
அவா்களுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அணிக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கம் குட்ஸ் கூடைப்பந்து அகாதெமி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அகாதெமி தாளாளா் பழநிவேல்ராஜன் தலைமை வகித்தாா்.
பாஜக மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட பாஜக தலைவா் ரமேஷ் கலந்து கொண்டு மாணவா்களுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பாஜக மாநில உள்ளாட்சி பிரிவுத் தலைவா் அறவாழி, மாவட்ட துணைச் செயலா் செங்கம் சேகா், பாஜக நகரத் தலைவா் காா்த்திகேயன், செங்கம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கோபி, உடற்கல்வி ஆசிரியா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.