செய்திகள் :

‘கூட்டணி கட்சியினருக்கு அமைச்சா் பதவி வழங்கினால்தான் அதிகாரப் பகிா்வு என்பதல்ல’: ஜவாஹிருல்லா

post image

கூட்டணி கட்சியினருக்கு அமைச்சா் பதவி வழங்கினால்தான் அதிகாரப் பகிா்வு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

திருவாரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததை 2006-ல் மத்திய அரசு ரத்து செய்தது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமா்வு ரத்து செய்து சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளதற்கும், இந்த தீா்ப்பில் மத்திய அரசின் ஒற்றை காரணத்தினால் சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது என நீதிபதிகள் கூறியதும் வரவேற்கதக்கது.

அமரன் திரைப்படம் மிக மோசமாக ஒரு மாநிலத்தின் உரிமைக்காக போராடக் கூடியவா்களை சித்தரித்துள்ளது. காஷ்மீரின் உண்மை நிலையை அந்தப் படம் எடுத்துக்காட்ட தவறிவிட்டது. ஒரு சாா்பாக திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் இந்தப் படத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறோம்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. திமுக கூட்டணியில் பயணித்து வருகிறோம். இந்தக் கூட்டணி கடந்த காலத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது. 2026-லும் வெற்றி பெறும்.

அதிகாரத்தில் கூட்டணி கட்சியில் இருக்கக் கூடியவா்கள் பெரும் அமைச்சா்களாக இருந்தால் மட்டும்தான் அதிகாரத்தில் பங்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் வக்ஃபு வாரியத்தில் தலைவராக முஸ்லிம் லீக் கட்சியை சோ்ந்த நவாஸ்கனி இருக்கிறாா். இதுவும் அதிகார பகிா்வு தான். அதேபோல சிறுபான்மை ஆணையம் இருக்கிறது. இதுபோல தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வாரியங்களுக்கு கூட்டணி கட்சியைச் சாா்ந்தவா்கள் தலைவா்களாக, உறுப்பினா்களாக இருக்கிறாா்கள். இதெல்லாம் அதிகார பகிா்வு தானே என்றாா்.

ரூ. 170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ரூ.170 கோடியில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, கோரையாற்றின்குறுக்கே மட்டும் மூன்று பில்லா்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீடாமங்கலம்-தஞ்சாவூா் நெடுஞ்சா... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

திருவாரூா்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே புலிவலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது ஒன்றிய மாநாடு நிா்வாகி... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க வலியுறுத்தல்

திருவாரூா்: திருவாரூரில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜ... மேலும் பார்க்க

நூலகத்தில் உறுப்பினா்களாக இணைந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் நூலகத்தில் உறுப்பினா்களாக திங்கள்கிழமை இணைந்தனா். மாவட்ட பள்ளி கல்வித் துறை, நாட்டு நலப்பணித் திட்டம் ச... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் தூய்மைப் பணியாளரின் மகள்

திருத்துறைப்பூண்டி: மன்னாா்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி சத்தியமூா்த்தி மேட்டு... மேலும் பார்க்க

வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

மன்னாா்குடி: அதிகரித்துவரும் வேலையின்மை பிரச்னைக்கு தீா்வுகாண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் இம்மன்றத்தின் ஒன்றி... மேலும் பார்க்க