செய்திகள் :

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்த சந்திராப்பூர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து மூவரும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தனர். இம்மனு நீதிபதிகள் நிதின் சூர்யவன்சி, மகேந்திர சந்த்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை

இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட வாசிம் கானுடன் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் விருப்ப உறவு வைத்திருந்ததாகவும், அதன் பிறகு வேறு ஒருவருடன் லிவ் இன் உறவில் வாழ்ந்ததாகவும், அதோடு அப்பெண் திருமணமானவர் என்றும் வாதிட்டார்.

ஆனால் அந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். "லிவ் இன் உறவுக்கு முன்பு சம்பந்தப்பட்ட பெண் வாசிமுடன் உறவு வைத்திருந்தாலும், அப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவருடன் உறவு வைத்துக்கொள்ள முடியாது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கமோ அல்லது அவரின் கடந்த கால செயல்களோ அவர் உறவுக்கு முடியாது என்று சொல்வதற்கான உரிமையை மறுக்கவில்லை. ஒரு பெண் தாம்பத்திய உறவுக்கு முடியாது என்று சொல்லிவிட்டால் முடியாதுதான்.

அதன் பிறகுக் கட்டாயப்படுத்திச் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் குற்றம்தான். இவ்விவகாரத்தில் பெண்ணின் சம்மதத்தை மதிப்பீடு செய்வதில் அவரது நடத்தையோ அல்லது அவர் பாலியல் உறவு வைத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கீழ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பீடி இலை பறிக்கச் சென்ற பழங்குடியினப் பெண்கள் `புலி' தாக்கி இறப்பு... மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராப்பூரில் வனப்பகுதி அதிகமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் விறகு எடுக்க அடிக்கடி வனப்பகுதிக்குள் செல்வதுண்டு. அங்குள்ள சிந்தேவாஹி வனப்பகுதி அருகில் இருக்கும்... மேலும் பார்க்க

Miyazaki Mango: வைரத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும் மியாசாகி மாம்பழங்கள் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜப்பான் நாட்டில், மியாசாகி மாம்பழங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நாடு முழுவதும் கோடை காலத்தில் மாம்பழங்களுக்கான சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மியாசாகி மாம்பழம் மிகவும்... மேலும் பார்க்க

Yalda Hakim: பாகிஸ்தான் அமைச்சர்களை நேரலையில் அலறவிட்ட நிருபர் - யார் இந்த யால்டா ஹக்கீம்?

ஆப்கானிஸ்தானை சேர்ந்த யால்டா ஹக்கீம், மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளுடனான தனது அதிரடியான, தயக்கமற்ற நேர்காணல்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளார். ‘ஸ்கை நியூஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் யால்டா ஹக்கீம் சம... மேலும் பார்க்க

India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள், 26 பேரை சுட்... மேலும் பார்க்க

`சீனர்களிடம் எங்களை விற்றுவிட்டனர்’ - லாவோஸ் சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தப்பியவர்கள் கண்ணீர்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான இணையத்தள குற்றங்கள் நடக்கிறது. இந்த இணையத்தள குற்றங்களை நடத்துபவர்கள் ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் செயல்படுகின்றனர். இதனால் அவர்களை கைது செய்வது எ... மேலும் பார்க்க

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீர... மேலும் பார்க்க