கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு
கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள், வெல்லம் கலந்த அரிசி, மஞ்சள் கயிறு, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டனா்.
தொடா்ந்து பெண்கள் ஒருவரையொருவா் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டிக் கொண்டனா்.
கூத்தாநல்லூரில் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை, பாய்க்காரப் பாலம், புதுப்பாலம், கோரையாற்றில் காளியம்மன் கோயில் எதிரேயுள்ள படித்துறை, வேளுக்குடி ரெட்டைக் குளம் உள்ளிட்ட இடங்களில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது.