Kingdom: "முற்றிலும் கற்பனையே" - இலங்கைத் தமிழர்கள் சித்தரிப்பு சர்ச்சை; வருத்தம...
கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்
கூலி திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “கூலி திரைப்படத்தில் ரசிகர்கள் ரசிக்கக்கூடிய காட்சிகள் பல இருந்தாலும் நான் தனிப்பட்ட முறையில் இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்குகளில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். அந்தக் காட்சியை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்..! கூலி படத்தில் எந்தப் பாடல்?