செய்திகள் :

கூலி எப்படியிருக்கிறது? அனிருத் பதில்!

post image

கூலி திரைப்படத்தைப் பார்த்த அனிருத் அதுகுறித்துப் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்த் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது. தற்போது, அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற அனிருத்திடம், ‘நீங்கள் இசையமைக்கும் படங்கள் எப்படி இருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் எமோஜிகள் (emojis) மூலம் தெரிவிப்பீர்கள். அப்படி, கூலி திரைப்படத்திற்கு என்ன எமோஜி வைத்திருக்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது

அதற்கு அனிருத், “நான் இப்போது படம் குறித்து எமோஜிகள் இடுவதில்லை. கூலி திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். நெருப்பு மாதிரி இருக்கிறது. இங்கேயே தீ எமோஜியை பதிவுசெய்கிறேன்.” என்றார்.

கூலி திரைப்படம் நன்றாக இருப்பதாக அனிருத் சொன்னது ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையும் படிக்க: மரண மாஸ் ஓடிடி தேதி!

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம் - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளிலிருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் வற்றி வரும் நதி நீர்.செனாப் நதியின் வழித்தடம் ... மேலும் பார்க்க

இந்த 7 தவறான பழக்கங்கள் உங்கள் மூளையைப் பாதிக்கும்!

மூளை, உடலில் அனைத்து செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமானது. எண்ணங்கள், உணர்ச்சிகள், இயக்கங்கள், புலன்கள் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மூளையின் செயல்திற... மேலும் பார்க்க

மரண மாஸ் ஓடிடி தேதி!

நடிகர் பாசில் ஜோசஃப் நடித்த மரண மாஸ் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநராக அறியப்பட்ட ஃபாசில் ஜோசஃப் தற்போது மலையாள சினிமாவில் நடிகராகக் கலக்கி வருகிறார். எந்தப் படத்தில் நடித்தாலும் தன... மேலும் பார்க்க

பாலிவுட் மோசமானது! நேரலையில் கண்ணீருடன் பேசிய இர்ஃபான் கான் மகன்!

நடிகர் பபில் கானின் நேரலை விடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் மகன் பபில் கானும் நடிகராக இருக்கிறார். இவர் நடித்த ஃபரைடே நைட் பிளான் (friday night p... மேலும் பார்க்க