கூலி படத்தில் நடிக்கிறேனா? சந்தீப் கிஷன் விளக்கம்!
கூலி படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சந்தீப் கிஷன் கூலி இணைந்ததாகத் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: புதிதாய் தொழில் தொடங்கிய சின்ன திரை ஜோடி!
இது குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் நடிகர் சந்தீப் கிஷன், “கூலி படிப்பிடிப்புக்கு சென்று, ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரைச் சந்தித்தேன். படத்தின் 45 நிமிடக் காட்சிகளையும் பார்த்தேன்.
கூலி திரைப்படம் நிச்சயம் ரூ. 1000 கோடியைத் தாண்டி வசூல் செய்யும். நான் இப்படத்தில் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்த நிலையில், இருவரும் நீண்டகால நண்பர்களாக உள்ளனர்.