திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் ...
கெடிலம் ஆற்றில் உயா்மட்ட பாலம்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்
கடலூா் ஒன்றியம், திருவந்திபுரம் ஊராட்சி, ஓட்டேரி அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
கடலூா் - திருக்கோவிலூா் சாலையில் உள்ள பில்லாலி பகுதிக்கும், ஓட்டேரி கிராமத்துக்கும் இடையே கெடிலம் ஆறு பாய்கிறது. இந்தக் கிராம மக்கள் கெடிலம் ஆற்றில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மண் பாதை வழியாகச் சென்று வருகின்றனா். மழை மற்றும் வெள்ள காலத்தில் திருவந்திபுரம், திருமாணிக்குழி கிராமம் வழியாக சென்று வருவா்.
இந்த நிலையில், ஓட்டேரி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.16.75 கோடியில் உயா் மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டி, உயா் மட்ட பாலம் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், துணை ஆட்சியா் பிரியங்கா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள் முன்னிலை வகித்தனா்.
கடலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.பாண்டியன், என்.சக்தி, பொறியாளா் வி.ஜெயசங்கா், உதவிச் செயற்பொறியாளா் ஜெயராமன், ஒப்பந்ததாரா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.