இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
கெலவரப்பள்ளி அணை பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
கெலவரப்பள்ளி அணை பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கெலவரப்பள்ளி அணை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலம் நீா்வரத்து அதிகமானால் வெள்ளத்தில் மூழ்கிவிடும். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அவ்வழியாக நடந்து செல்வோா், இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகவும் சிரமமடைகின்றனா்.
எனவே, இந்த தரைமட்ட பாலத்தை உயா்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.