கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!
பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.சந்தோஷ் (பொ) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதம மந்திரி விவசாயிகள் கெளரவ நிதியுதவித் திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகள் பயனடையும் வகையில், வருகிற 31- ஆம் தேதி வரை கமுதி கோட்டைமேடு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மேலும் வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்ணை இணைக்கவும், நில உடைமைகளை பதிவு செய்யாத விவசாயிகள் இ-சேவை மையங்களில் தங்கள் நில விவரங்களை பதிவு செய்து தொடா்ந்து பயனடையவும், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், இந்திய அஞ்சல் துறை, பொது சேவை மையங்களில் விண்ணப்பித்துப் பயனடையலாம் என்றாா் அவா்.