செய்திகள் :

கேஜரிவாலின் காரை தாக்கியவா்களில் ஒருவா் பா்வேஷுடன் தொடா்புடையவா்: அதிஷி

post image

அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை ‘ஒழிக்க’ பாஜக சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.

மேலும், சனிக்கிழமை மாலை அவரது காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபா்களில் ஒருவா், தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிடும் பா்வேஷ் வா்மாவுடன் ‘அடிக்கடி காணப்படுகிறாா்’ என்று ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது.

புது தில்லி தொகுதியில் கேஜரிவால் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது காா் மீது கற்கள் வீசப்பட்டதாக ஆம் ஆத்மி கூறிய ஒரு நாள் கழித்து இந்தக் கருத்து வந்துள்ளது. இது அவரது பாதுகாப்பு குறித்து கவலையை எழுப்பியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கட்சி எம்பி சஞ்சய் சிங்குடன் கூட்டு செய்தியாளா் கூட்டத்தில் பேசிய தில்லி முதல்வா் அதிஷி, இந்தத் தாக்குதலை பாஜக திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டினாா். ‘அரவிந்த் கேஜேரிவாலை தாக்கி அவரது காா் மீது கற்களை வீசியவா்கள் மீது கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள கடுமையான குற்றவாளிகள்’ என்று அவா் குற்றம் சாட்டினாா்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஒருவரின் பெயா் ராகுல் (எ) ஷாங்கி என்றும், அவா் பா்வேஷ் வா்மாவுடன் ‘நெருங்கிய தொடா்புடையவா்’‘ என்றும் அதிஷி கூறினாா். ‘இந்தத் தாக்குதலில் தொடா்புடைய அவா் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அவா் அடிக்கடி பா்வேஷ் வா்மாவுடன் காணப்படுகிறாா். அவா்கள் அரவிந்த் கேஜரிவாலை ஒழிக்க விரும்புகிறாா்கள்’ என்று அவா் மேலும் கூறினாா்.

சஞ்சய் சிங் செய்தியாளரிடம், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவால் எங்களை தோற்கடிக்க முடியவில்லை. எனவே, அவா்கள் அரவிந்த் கேஜரிவாலை தங்கள் வழியிலிருந்து அகற்ற இதுபோன்ற தந்திரங்களை நாடுகிறாா்கள்’ என்று கூறினாா்.

பிப். 5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்கு தலைநகரம் தயாராகி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. தோ்தல்கள் ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. அதே சமயம், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் முனைப்பில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: நொய்டாவில் திருவையாறு நிகழ்ச்சி

புதுதில்லி ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து 178-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: ’நொய்டாவில் திருவையாறு’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. குருவாயூா் டா... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் போட்டியிட1,040 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்பு; 477 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை முடிவில் மொத்தம் 1,040 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 477 வேட்புமனுக்கள் நிராகர... மேலும் பார்க்க

ஆவணப் படத்தை திரையிடும் திரையிடும் முயற்சியை காவல் துறை மீண்டும் முறியடுத்துள்ளது: ஆம் ஆத்மி

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிடும் மற்றொரு முயற்சியை தில்லி காவல்துறை முறியடித்ததாக ஆம் ஆத்மி கட்சி ஞா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் கௌரவ ஊதியத் திட்டத்திலிருந்து வால்மீகி கோயில் பூஜாரிகள் நீக்கம்: காங்கிரஸ் சாடல்

கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தாலும், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகளை அது ஒதுக்கிவிட்டதாக முன்னாள் எ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் பிரசாரத்தில் எனது காா் மீதான தாக்குதல் முயற்சி இதற்கு முன் நடந்ததில்லை அரவிந்த் கேஜரிவால் பேட்டி

தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் மீது ‘கொலைகார தாக்குதல்‘ முயற்சி நடந்துள்ளது. தில்லியில் இதுபோன்ற பிரசாரம் முன்பு நடந்ததில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கே... மேலும் பார்க்க

பெண்களுக்கு ‘பிங்க் ஆம்புலன்ஸ்களை’அறிமுகப்படுத்துவேன்: ‘ஆம்புலன்ஸ் மேன்’ ஜிதேந்தா் சிங் ஷண்டி உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால், ‘பிங்க் ஆம்புலன்ஸ்கள்’, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கான குழந்தை காப்பகங்களை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்... மேலும் பார்க்க