சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
கேரளத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமானது துடரும்!
மோகன்லாலின் துடரும் திரைப்படம் கேரளத்தில் அதிக வசூலை ஈட்டியுள்ளது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.
குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.
இதில், கேரளத்தில் மட்டும் இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். இதனால், இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களிலேயே கேரளத்தில் அதிக வசூலை ஈட்டிய படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.
முன்னதாக, இடுக்கி வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான 2018 திரைப்படமே கேரளத்தில் அதிக வசூலை ஈட்டிய படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஏஸ் டிரைலர் தேதி!