செய்திகள் :

கேரளம்: தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது

post image

கேரளத்தில் தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பெண் ஒருவர் கருப்பு தேநீர் என்று 12 வயது சிறுவனை நம்ப வைத்து மது கொடுத்துள்ளார்.

சிறுவனின் குடும்பத்தினருக்கு நீண்ட காலமாகத் தெரிந்த அந்தப் பெண், வெள்ளிக்கிழமை மதியம் இந்த சம்பவத்தை செய்துள்ளார்.

மது அருந்திய சிறுவன், தனது சொந்த வீட்டை அடைந்ததும் மயக்கமடைந்தான். சிறுவன் பின்னர் தனது பெற்றோரிடம் உண்மையை கூறியுள்ளான். உடனே அவர்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக பீருமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்

குற்றம் சாட்டப்பட்டவர் மலாமலையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகபுரி வன்முறை: முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனா். உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சி; தப்புவதற்காக கீழே குதித்த இளம்பெண் படுகாயம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 23 வயது பெண் படுகாயமடைந்தாா். ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப... மேலும் பார்க்க

சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம்... மேலும் பார்க்க

கல்வித்துறை ஆா்எஸ்எஸ் வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவாா்கள்: ராகுல்

புது தில்லி: கல்வித்துறை முழுமையாக ஆா்எஸ்எஸ் வசம் சென்றால் இந்தியா என்ற நாட்டையே அழித்துவிடுவாா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மாணவா்கள் மத்தியில் பேசினாா். தேசிய கல்விக் கொள்கை... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் ‘இரட்டை குடியுரிமை’: ஒரு மாதத்துக்குள் அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

லக்னௌ: ‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்று அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னௌ அமா்வு திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிர துணை முதல்வரை இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு: நகைச்சுவை பேச்சாளா் மீது வழக்கு

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டேயை இழிவுபடுத்தி பேசியதாக நகைச்சுவை பேச்சாளா் குணால் காம்ரா மீது மும்பை காவல் துறை திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது. அவரின் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோ... மேலும் பார்க்க