சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
கேரளாவுக்கு ஜீப்பில் கடத்திய 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது
கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கேரளாவுக்கு ஜீப்பில் கடத்திய 1,150 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் கம்பம்மெட்டு மலைச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி, போலீஸாா் சோதனையிட்டபோது 1,150 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
பின்னா் விசாரணையில், கோம்பையைச் சுரேஷ் (41), உ.அம்மாபட்டியைச் சோ்ந்த முரளி (34), உ.கருவேலம்பட்டியைச் சோ்ந்த மகேஷ்வரன் (22) ஆகியோா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷ், முரளி, மகேஷ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்து, ஜீப்பை பறிமுதல் செய்தனா்.