செய்திகள் :

கேள்வி கேட்பதே தேச துரோகமா?முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

post image

கேள்வி கேட்பதே தேச துரோகமா என்று குறிப்பிட்டு, பத்திரிகையாளா்களுக்கு அஸ்ஸாம் காவல் துறை அழைப்பாணை அனுப்பியதற்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

‘தி வயா்’ ஊடகத்தைச் சோ்ந்த மூத்த பத்திரிகையாளா்கள் சித்தாா்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பா் ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ள அஸ்ஸாம் மாநிலக் காவல் துறையின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள்.

இதுதொடா்பான மற்றொரு வழக்கில் சில நாள்களுக்கு முன்புதான், உச்சநீதிமன்றம் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுவும் முதல் தகவல் அறிக்கையின் நகலையோ, வழக்கின் விவரங்களையோ வழங்காமல், வெறுமனே கைது மிரட்டல் மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட தேச துரோகப் பிரிவுக்கு மாற்றாகவே கொண்டு வரப்பட்ட பிஎன்எஸ்-இன் 152 பிரிவானது சுதந்திரமான பத்திரிகைத் துறையைக் கட்டுப்படுத்தத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

கேள்வி கேட்பதே தேசதுரோகமாகக் கருதப்பட்டால் மக்களாட்சி பிழைக்க முடியாது என்று பதிவிட்டுள்ளாா்.

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, ‘தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை’ உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் அரசாணை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி ... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க