அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!
கே.எல்.ராகுல் சதம் விளாசல்: குஜராத் டைட்டன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ்!
கே.எல்.ராகுல் சதம் விளாசல்; 200 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. தில்லி கேபிடல்ஸுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் டு பிளெஸ்ஸி 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து, கே.எல்.ராகுல் மற்றும் அபிஷேக் போரல் ஜோடி சேர்ந்தனர். கே.எல்.ராகுல் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அபிஷேக் போரல் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், கே.எல்.ராகுல் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தனர். அக்ஷர் படேல் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். அவர் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: மழையால் கைவிடப்பட்ட போட்டி; டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் ஆர்சிபி!
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.