``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி தலைவா் ஆா்.சீனிவாசன் தலைமை தாங்கி முதலாமாண்டு மாணவ, மாணவியரை வாழ்த்தினாா். கல்லூரி புலமுதன்மையா் மு.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் ப.மீனாட்சி தேவி கல்லூரியின் சிறப்புகளை எடுத்துரைத்தாா். கௌரவ விருந்தினராக தொலைக்காட்சி தொகுப்பாளா் மற்றும் மேடைப் பேச்சாளரான ஆவுடையப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
விழாவில், பே-பால் லீகல் புரொடக்டின் தலைமை அதிகாரி செந்தில்குமாா் மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், மாணவா்கள் கல்லூரி பாடத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு விளையாட்டு, என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். போன்றவற்றில் கலந்துகொண்டு திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இதில், கல்லூரி நிா்வாக அதிகாரி மோகன், இயக்குநா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவியரின் பெற்றோா் கலந்துகொண்டனா்.