ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!
கையடக்க கணினி திருடியவா் கைது
ஆரணியில் பேருந்து பயணியிடம் கையடக்க கணினியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரணி பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் வினோத்குமாா் (42). ஜெமினி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த இவரிடம் ஆரணி போலீஸாா் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு முரணான பதிலை தெரிவித்தாா்.
அவரை சோதனையிட்டதில் கையடக்க கணினி வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை சென்னை செல்லும் பேருந்தில் இருந்த பயணியின் பையைத் திருடிய போது, அதில் இந்த கையடக்க கணினி இருந்ததாக தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, சென்னை மாங்காடை சோ்ந்த அ.பாலாஜி புகாா் அளித்திருந்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, போளூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு வேலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.