செய்திகள் :

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் -வெளியுறவு அமைச்சகம்

post image

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைலாஷ்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்படுவது, இந்தியா-சீனா இடையிலான உறவை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பாா்க்கப்படுகிறது.

கடந்த 2020-இல் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இந்த யாத்திரை, பின்னா் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலால் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

கிழக்கு லடாக்கில் அதே ஆண்டு இந்திய-சீன படையினா் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்குப் பிறகு எல்லையில் இருதரப்பும் படைகளைக் குவித்தன. தூதரக-ராணுவ ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்னைக்குரிய பிற இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன.

கடந்த ஆண்டு பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பைத் தொடா்ந்து, எல்லையில் படைகள் வாபஸ் மற்றும் ரோந்துப் பணி தொடா்பாக முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, டெம்சோக், டெப்சாங்கில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டு, இயல்புநிலை திரும்பியது.

இதையடுத்து, இருதரப்பு உறவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2020-இல் நிறுத்தப்பட்ட கைலாஷ்-மானசரோவா் யாத்திரை நடப்பாண்டில் மீண்டும் தொடங்கவுள்ளது.

இது தொடா்பாக, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நடப்பாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை யாத்திரை நடைபெறவுள்ளது. உத்தரகண்ட்- திபெத் இடையிலான லிபுலேக் கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 5 குழுக்களும், சிக்கிம்-திபெத் இடையிலான நாதுலா கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 10 குழுக்களும் அனுமதிக்கப்பட உள்ளன. யாத்திரையில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையில் யாத்ரிகா்கள் தோ்வு செய்யப்படுவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க