செய்திகள் :

கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்

post image

புது தில்லி: அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்த போது, கை மற்றும் கால்களில் விலங்கு போட்டிருந்தனர் என்று இந்தியர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும், தங்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டிருந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்தியா திரும்பியபோது, எங்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு இருந்ததாகவும், பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தோம். விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகுதான் எங்கள் கால்களில் இருந்த சங்கிலி அகற்றப்பட்டது என்றும் பலரும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவிலிருக்கும் வேறொரு முகாமுக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவோம் என்று நினைத்திருந்ததாகவும், செய்திகள் மூலமாகத்தான் தாங்கள் இந்தியா அழைத்து வரப்படுவதையே அறிந்துகொண்டோம் என்றும் சிலர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதித்து, குடும்பத்துக்கு பணம் அனுப்பலாம் என்றுதான் எல்லோரும் பல லட்சம் செலவழித்து அமெரிக்கா சென்றதாகவும், ஆனால், தற்போது கடன்காரர்களாக திரும்ப வந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்தியர்களுக்கு கைவிலங்கு இட்டதாக வந்த தகவல்களை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் போலியானது என்றும் கூறியிருந்தது. இந்த புகைப்படங்கள் அகதிகளை குவாத்தமாலா பகுதிக்கு நாடு கடத்தும்போது எடுத்தப் புகைப்படங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியர்களே தங்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகக் கூறியிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலயைத்துக்கு வந்தடைந்தனர்.

இந்த விவகாரத்தில், இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்படும் படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மௌனப் போக்கை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா, வெளியிட்ட எக்ஸ் பதிவில், இதுபோன்று 2013ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்த போது, இந்திய அரசு சார்பில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டதாகவும், அமெரிக்க தூதரகத்துக்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை இந்தியா திரும்பப் பெற்றது என்றும் தெரிவித்திருந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்து!

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பஹ்ரேதா சனி கிராமம் அருகே இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ... மேலும் பார்க்க

பாஜகவுக்கு நாட்டு நலனே முக்கியம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம்; ஆனால், பாரதிய ஜனதாவுக்கு நாட்டின் நலனே முக்கியம் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்... மேலும் பார்க்க

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்!

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியர்க... மேலும் பார்க்க