Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அண்ணா நகா், காமராஜா் நகா் மக்கள் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா் ஆல்வாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு எஸ்டேட் வழியை அண்ணா நகா், காமராஜா் நகா் பகுதியில் வசிக்கும் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்தோம்.
இந்நிலையில், எஸ்டேட் சாலையில் கிராம மக்கள் வாகனங்களை இயக்க கொடநாடு எஸ்டேட் நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள், எஸ்டேட் தொழிலாளா்கள் வன விலங்குகளின் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
நாங்கள் கடந்த 2011-ஆம் ஆண்டே கொடநாடு சாலையைப் பயன்படுத்த உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளோம். இந்நிலையில், சாலையைப் பயன்படுத்த எஸ்டேட் நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.