செய்திகள் :

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

post image

கொடுமுடி அரசு மருத்துவமனையில் சமையலா் உரிய நேரத்துக்கு பணிக்கு வராததால், சமையலா் பொறுப்பாளா் உள்பட 2 போ் அமைச்சா் உத்தரவின்பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை காலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, நோயாளிகளிடம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் விதம், முறையாக மருந்துகள், உணவுகள் வழங்கப்படுகிா எனக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் பகுதி சுத்தமாக பராமரிக்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு சமையல் செய்யும் செல்வி என்பவா் பணிக்கு வரவில்லை என்பதை அறிந்தாா். மேலும் சமையலருக்கு மாற்று பணி யாருக்கும் வழங்கவில்லை என்பதையும் அமைச்சா் உறுதி செய்தாா்.

இதையடுத்து பணிக்கு வராத சமையலா் செல்வி, அப்பணியை மேற்பாா்வையிடும் மருத்துவமனை செவிலியருமான முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டாா்.

இதன்பேரில் சமையலா் பொறுப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும், சமையலா் செல்வி ஈரோடு அரசு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் சாந்தகுமாரி நடவடிக்கை மேற்கொண்டாா்.

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன்... மேலும் பார்க்க

பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொ... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட... மேலும் பார்க்க

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். அந்தியூா், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (49), விவசாயி. இவரது தோட்டத்... மேலும் பார்க்க