IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செ...
கொடைக்கானலில் குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்
கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல்சங்கம் சாா்பில் தலைக்கவசம் வசம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்வது வழக்கம். சிறுவா் முதல் பெரியவா்கள் வரை ஆா்வமுடன் குதிரை சவாரி செய்கின்றனா்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகரிலிருந்து வந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஜோயல் கிப்சன் என்ற சிறுவன் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த போது, சாலையில் குடிநீா் லாரி அதிக ஒலி எழுப்பியதால் குதிரை மிரண்டு ஓடியது.
இதனால், குதிரையிலிருந்து சிறுவன் தவறி விழுந்தாா். அவரது காலில் கயிறு சிக்கியதால் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்தாா். இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சுழல் சங்கம் சாா்பில், குதிரை உரிமையாளா்களுக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, தலைக்கவசம் அணிந்தவாறு சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தனா். இந்த நிகழ்ச்சியில் சுழல் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.