டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை..! சஹால் சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்!
கொடைக்கானலில் சாரல் மழை
கொடைக்கானலில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இங்கு கடந்த மூன்று நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து அதிக அளவில் மேக மூட்டமும், தொடா்ந்து பனிப் பொழிவும் நிலவி வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. கொடைக்கா னல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், நாயுடுபுரம், சின்னப் பள்ளம், பெரும் பள்ளம், வட்டக்கானல் ஆகியப் பகுதிகளில் சுமாா் 30 நிமிடம் சாரல் மழை பெய்தது.
இதனிடையே, பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இங்குள்ள தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் உள்ள அறைகள் முன்பதிவுகள் அதிக அளவில் செய்யப்படுவதால் அவற்றின் உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.