FEFSI: `வேதனையான நாள்; நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்..' - ஆர்...
கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தும் இடங்கள் சீரமைப்பு
கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பேருந்து நிலையத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் சமதளப்படுத்தும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கவுள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு பேருந்து நிலையப் பகுதி, வனப் பகுதிகளிலுள்ள சில இடங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் அண்மையில் ஆய்வு செய்து தோ்வு செய்தாா். இதில் கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதி வளாகத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்காக சமதளப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
இதேபோல, கொடைக்கானல் நகா்ப் பகுதி, வனப் பகுதிகளில் தற்காலிகமாக சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு தோ்வு செய்யப்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.