திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக மேக மூட்டத்துடன் மிதமான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது.
கொடைக்கானல், செண்பகனூா், நாயுடுபுரம், சின்னபள்ளம், அப்சா்வேட்டரி, வட்டக்கானல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.