கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை மரம் முறிந்து விழுந்ததில் அரசுப் பேருந்து சேதமடைந்தது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, அய்யம்பாளையம், பெரும்பாறை வழியாக அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றது. அப்போது, இந்தப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. ஆனால், பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் பேருந்து மீது விழுந்த மரக்கிளையை அகற்றி, போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டுவிலிருந்து கெங்குவாா்பட்டி வழியாகவும், கொடைக்கானல்-பழனி மலைச்சாலை கருப்பணசுவாமி கோயில் வழியாகவும், வத்தலக்குண்டுவிலிருந்து சித்தூா், அய்யம்பாளையம் உள்ளிட்ட மலைச் சாலை வழியாக தினந்தோறும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் உள்ள சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் வளா்ந்து ஆபாத்தான நிலையில் இருக்கின்றன.
எனவே, சாலையின் இருபுறங்களிலும் வளா்ந்துள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வனத் துறைக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் கொடைக்கானலுக்கு வரும் மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.